பியூட்டி பார்லரில் தங்க, வைர மோதிரம் திருடிய பெண் கைது..!

கோவை ராமநாதபுரம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 45) இவர் பங்கஜாமில் ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் . இவரது பியூட்டி பார்லருக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஜெயலட்சுமிடம் பேஷியல் செய்ய வேண்டும் என்றும் புருவம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். இதையடுத்து ஜெயலட்சுமி தனது விரலில் அணிந்து இருந்த தங்க , வைர, மற்றும் வெள்ளி மோதிரங்களை கழட்டி மேஜர் டிராயரில் வைத்துவிட்டு வேலை பார்த்தார் .பின்னர் 2 பெண்களும் பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது தங்க, வைர,வெள்ளி மோதிரங்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதையடுத்து அழகு நிலையத்திற்கு வந்த 2 பெண்களின் மீது சந்தேகம் இருப்பதாக ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரண நடத்தியதில் அழகு நிலையத்திற்கு வந்த ராமநாதபுரம் திருவள்ளூர் நகரை சேர்ந்த திவ்யா (வயது 28) என்பவர் தான் தங்க ,வைர, வெள்ளி மோதிரங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..