கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.!!

உலகம் முழுவதும் இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டியாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றுஉற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இயேசு பிறப்பை கொண்டாடுவகையில் கிறிஸ்தவ மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்றனர் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க – கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.குடில்கள் அமைக்கப்பட்டும்,தோரணங்கள் கட்டப்பட்டும், ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி சி.எஸ்.ஐ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை காலை 4 மணிக்கு நடந்தது. அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் மண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் செயலாளர். சந்திரன், பொருளாளர் ஜான் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆலய தலைவர் பாதிரியார் ராஜேந்திரகுமார் தலைமையில் பாதிரியார்கள் சற்குணம், சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மாலை 6:30 மணி என 3 நேரங்களில் சிறப்பு பிரார்த்தனை ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆலய செயலாளர் ஜே. பி. ஜேக்கப், பொருளாளர் ஜெ. ஏ.பரமானந்தம், அருண் ஆனந்தராஜ், ஆடம் அப்பாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.கோவை பெரிய கடை வீதியில் உள்ள தூய மைக்கேல் ஆலயத்தில் பிஷப் அக்குவினாஸ் தாமஸ்தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம் ,கணபதி புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம்,ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. சகல பரிசுத்தவான ஆலயம், ராமநாதபுரம் உயிர்த்த ஆண்டவர் ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் காந்திபுரம் பாத்திமா ஆலயம் ,போத்தனூர் புனித ஜோசப் தேவாலயம், கோவைபுதூர் குழந்தை ஏசு தேவாலயம், ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயம் காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் சவுரிபாளையம் இம்மானுவேல் தேவாலயங்கள்உட்பட அனைத்து தேவாலயங்களிலும்சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதுயொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.