கோவை சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்..

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள நாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கரன் ( வயது 58) இவர்போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சங்கரனின் மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் மரணம் அடைந்தார் .அன்று முதல் அவர் தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்தார்.நேற்று காலை வீட்டிலிருந்த சங்கரனுக்கு திடீ மாரடைப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியில் சங்கரன் பரிதாபமாக இறந்து விட்டார். மனைவி இறந்த 15 வது நாளில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெயரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . சங்கரரின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.