உதகையில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் கிறிஸ்மஸ் பேரணி..!

நீலகிரி மாவட்டம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபையர்களும் ஒன்று கூடி கிறிஸ்மஸ் நற்செய்தி பேரணியை புனித தாமஸ் ஆலயத்தில் பெந்தகோஸ்து போதகர்கள் ஐக்கியம் சபை சார்பில், பாஸ்டர் விக்டர் பிராங்கிளின் தலைமையில் அனைத்து போதகர்கள் ஜஸ்டின், டோனி, ஜான்சன், சௌந்தரராஜன், கோல்டஸ்ட், தினகரன், சந்தோஷ் ஜேக்கப், தயால் செந்தில், பிலிப் ஹரிஷ் அனிபா, ஆகியோரின் முன்னிலையில் மாபெரும் பேரணி 3 மணியிலிருந்து 5:30 மணி வரைக்கும் நடைபெற்றது, பேரணி உதகை தாமஸ் ஆலயத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம், லோயர் பஜார் மார்க்கெட், காபி ஹவுஸ் சாலை வெளியாக கிறிஸ்மஸ் பாடல்கள் கிறிஸ்மஸ் செய்திகளை பல சபையின் போதகர்கள் வழங்கி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர், கிறிஸ்தவ சபை மக்கள் குழந்தைகள் குடும்பத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்று அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து பேரணியில் பங்கேற்றனர், இந்தப் பேரணியில் உதகையில் உள்ள அனைத்து பெந்தகோஸ்து திருச்சபை அனைத்து போதகர்களும் சபையர்களும் இணைந்து கிறிஸ்மஸ் பவணியாக சென்று கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்ச்சியை இந்த உதகை பட்டணத்திற்கு தெரிவிக்கும்படியான கிறிஸ்மஸ் நற்செய்தியின் பேரணி நடைபெற்றது, இதில் 50 சபைகளில் இருந்து 500க்கும் மேலான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர், வழிநெடுக்க கிறிஸ்துவ பாடல்கள் பாடி, பொதுமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் கிறிஸ்துவை பற்றியான செய்திகளையும் வழங்கி, உதகை நகர வியாபாரிகள் பொதுமக்களுக்காக பிரார்த்தனைகளும் செய்யப்பட்டு வந்தன, ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் பெந்தகோஸ்து போதகர்கள் ஐக்கிய சபை தலைவர் விக்டர் பிராங்கிளின் கிறிஸ்மஸ் சிறப்பு செய்திகளை வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது,