2010ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த 12 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஜவுளித்துறை ஆணையர் லலிதா, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தமிழக பிரிவை சேர்ந்த பிரவின் நாயர், மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் தமிழக பிரிவை சேர்ந்த சங்கர் லால் குமாவத், தமிழ்நாடு சிமெண்ட் கழக நிறுவனத்தின் இயக்குநர் அஜய் யாதவ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.
இதேபோல் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் கண்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் ஆணையர் நடராஜன், சிஎம்டிஏ தலைமை இயக்குனர் சிவஞானம், தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராமன் உள்ளிட்டோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தொழில்கள் மற்றும் வணிக ஆணையத்தின் இயக்குநர் நிர்மல்ராஜ், குடிமை பொருள் வழங்கல் துறை நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை ஆகியோருக்கும் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.








