சட்டக் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ் எஸ்கேப்.!!

கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஷேக் அப்துல்லா ( வயது 33 ) இவர் சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் பயணம் செய்யும் போது சட்டக் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக அந்த மாணவி செல்போன் வீடியோ மூலம் புகார் செய்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஏட்டு ஷேக் அப்துல்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . இந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்..