நள்ளிரவில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள் .!!

கோவை துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 7 யானைகள் நள்ளிரவில் ஊருக்குள் வலம் வந்தன.

இதே போல நேற்று இரவு கதிர் நாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று வீதிகளில் உலா வந்தது. இதைப் பார்த்து நாய்கள் குறைத்ததால் பொதுமக்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது காட்டு யானை சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..