போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்த முயற்சி!

கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு மீது, வாலிபர் கத்தியால் குத்த முயற்சி செய்த காட்சிகள் தான் இது.அவர் பெல்டை வைத்து தாக்குதலை தடுத்து,நூலிழையில் உயிர் தப்பினார்.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதையில் இருந்த அந்த வாலிபர், தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, திடீர் என போலீசாரை ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்த காட்சிகள் தான் இது.

சுதாரித்துக்கொண்ட்ட காவலர் ராமகிருஷ்ணன், தன்னை தற்காத்து கொள்ள, தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்று தடுக்கவே, அருகே இருந்த மற்ற காவலர்கள், போதை ஆசாமியை மடக்கி பிடித்து கத்தியை பிடிங்கினர். போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில், அவரிடம் மிளகாய் தூள் மற்றும் சில ஆயுதங்கள் இருந்துள்ளது. விசாரணையில், போதையில் இருந்த வாலிபர்,தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோ என தெரியவந்தது. போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அந்த நபர் மீது குற்ற பின்னணி ஏதும் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.