தேனி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழு அம்ச கோரிக்கையுடன் காத்திருப்பு போராட்டம்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தலைமையில், மாநிலம் முழுவதும் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டத்தில், இந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அவர்கள் முன்வைத்த ஏழு முக்கிய கோரிக்கைகளில், பணிச்சுமை குறைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், பதவி உயர்வு முறைப்படுத்தல், சம்பள திருத்தம் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கும்.போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் நிறைவேறும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.








