தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்:பரபரப்பு!

பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல், கைகளாலேயே கழிவுகளை தரம் பிரித்து அகற்ற வற்புறுத்துவதாக, குற்றச்சாட்டி மாநகராட்சி  அலுவலகத்தை முற்றுயிட்டு, தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 28 வது வார்டு ஆவராம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பொதுவெளியில் கொட்டும் குப்பைகளில் மருத்துவ கழிவுகள், மனித கழிவுகள், இறைச்சி கழிவுகள் என அனைத்து கழிவுகளும் கலந்து உள்ளதாகவும், இவற்றை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், தூய்மை பணியாளர்கள், அந்த இடத்திலேயே குப்பைகளை தரம் பிரித்து வாகனங்களில் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதால், பல்வேறு நோய்தொற்றுகளுக்கு ஆளாகி வருவதாக தூய்மை பணியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒப்பந்தம் எடுத்து உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனமான ஸ்ரீநிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் கைகளாலேயே கழிவுகளை தரம் பிரித்து அகற்ற வற்புறுத்துவதாக, குற்றச்சாட்டி கோவை ஆவராம்பளையம் மாநகராட்சி 28 வது வார்டு அலுவலகத்தை முற்றுயிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ….