கோவை மூத்த பத்திரிகையாளர் காலமானார்..

கோவை கரும்புக்கடை சாரமேடு, ஞானியார் வீதியில் வசித்தவர் அமீன் (வயது 80) மூத்த பத்திரிகையாளர். இவர் வயது மூப்பால்,நேற்று மாலை காலமானார். இவர் கோவை மாலை முரசு, சன் நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களில் செய்தியாளராக பணிபுரிந்தவர் ஆவார். இவரது உடலுக்கு ஏராளமான பத்திரிகையாளர்கள், ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கோயம்புத்தூர் சீனியர் ஜெர்னலிஸ்ட் கிளப், கோயம்புத்தூர் ஜெர்னலிஸ்ட் அசோசியேசன் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டது..