கோவை போலீஸ் கமிஷனர் சாமி தரிசனம்.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக கண்ணன் கடந்த வாரம் பதவி ஏற்றார். இதை தொடர்ந்து அவர் மருத மலை அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலுக்கு நேற்று மாலையில் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து அவர் பஞ்ச முக விநாயகர், ஆதி மூலஸ்தானம் பட்டீஸ்வர சாமி பச்சநாயகி அம்மன் முருகன் வள்ளி தெய்வானை சுப்பிரமணியசாமி ஆகிய சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அந்த பகுதியில் உள்ள புறக் காவல் நிலையத்தை பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.