அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னரில் மழை நீர் தேங்குவதை தடுக்க வடிகால் அமைப்பு பணி. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பார்த்தார்.
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேற்று பார்வையிட்டார் இந்த பணியை விரைந்து முடிக்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார் .இது குறித்து மாநகராட்சி அதிகாரிகூறியதாவது:- மழைக்காலங்களில் லங்கா கார்னரில் சேகரமாகும் தண்ணீரை வாலங்குளத்திற்கு கொண்டு செல்ல வசதியாக சுமார் 150 மீட்டருக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்றது .இதில் தற்போது 24 மீட்டர் நீளத்திற்கு தயார் நிலையில் உள்ள கான்கிரீட் பாக்ஸ்கள் கொண்டு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த வடிகால் மேற்கண்ட மழைநீர் வடிகாலுடன் இணைக்கப்படும். இதன் மூலம் மழைகாலங்களில் மழை நீரை விரைந்து வெளியேற்ற முடியும் என்றனர்.இந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி காரணமாக லங்கா கார்னர் பாலம் வழியாக நேற்று போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.








