கல்லால் அடித்து தொழிலாளி படுகொலை..

கோவை கெம்பட்டி காலனி,ஹவுசிங் யூனிட் பாளைய ந்தோட்டம் 5 – வது வீதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஜப்பான் என்ற பிரவீன் குமார் ( வயது 20) கூலி தொழிலாளி. இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் தென்னை நார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் .கடந்த 20 24 ஆம் ஆண்டு செல்வபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெற்ற தகராறில் கோகுலகிருஷ்ணன் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார் .இந்த கொலை வழக்கில் பிரவீன் குமார் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான பிரவீன் குமார், மைசூரில் வேலை செய்து வந்தார் . இந்த நிலையில் கோவை வந்த பிரவீன் குமார் நண்பர்களுடன் செட்டி வீதி,பாலாஜி அவென்யூ முட்புதர் பகுதியில் நேற்று இரவு 7-30 மணி அளவில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று பிரவீன் குமாரை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினார்கள் . இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு பகுதி கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட பிரவீன் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 20 24 -ம் ஆண்டு கோகுலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பிரவீன் குமார் கொலை நடைபெற்றுள்ளது. எனவே கோகுல கிருஷ்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .இந்த வழக்கு தொடர்பாக செல்வபுரம் போலீசார் மனோஜ், கண்ணன் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.பழிக்குப் பழி நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.