பால் குடிக்கும் போது மூச்சு திணறி 2 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்..

கோவை இருகூர் எஸ்.ஐ. எச்.எஸ் காலனி, பி. ஆர் .கே. நகரை சேர்ந்தவர் கணேஷ் கு|மார் (வயது 35) டீ ஸ்டால் நடத்தி வருகிறார் .இவரது மனைவிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகள் பிறந்தன. அதில் விகாஸ் என்ற 2மாத ஆண் குழந்தைக்கு நேற்று பால் குடிக்கும் போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கணேஷ்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் செய்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..