கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, துர்கா என்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, எதிரே வந்த சுகம் என்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சிகிச்சைக்காக அணுகுமதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான ரத்த தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த விபத்தில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.