கோவை மே 9 கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் ராணி (வயது 70) இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ராணி தற்போது தனியாக வசித்து வருகிறார். அவர் கடந்த 1972 – 73 ஆம் ஆண்டு எஸ். எஸ். எல். சி படித்து முடித்தார் அதன் பின்னர் படிக்க முடியாத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு தன் கணவன் ,மகன் ,பேரன் என தனது குடும்பத்தை கவனித்து வந்தார். தற்போது குடும்பத்தில் எல்லோரும் பெரியவர்களாகிவிட்டதால் ராணி உயர்கல்வி படிக்கும் தனது ஆசையே நிறைவேற்ற விரும்பினார். இதற்காக அவர் பிளஸ் 2தேர்வு எழுதினார் அதில் 600க்கு 346 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்றுள்ள மார்க்குகள் விவரம் வருமாறு தமிழ் -89 ஆங்கிலம் -50 வரலாறு. 52, பொருளாதாரம் -48, வணிகவியல் -67, கணக்கு பதிவியல் 40.இவர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:- எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். ஆனால் எனது தந்தை காலத்தில் இருந்து கோவையில் வசித்து வருகிறேன் .கடந்த 1972 – ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். அதன் பின்னர் “டைப்ரைட்டிங் ” கற்றுக் கொண்டேன். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. வீட்டையும் குடும்பத்தினரையும் கவனித்துக் கொண்டேன் இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது .இதனால் மேலும் படித்து பட்டம் வாங்க முடிவு செய்தேன்.இதற்கு எனது மகன், மகள், உறுதுணையாக இருந்தனர். கடந்த ஆண்டு தனித் தேர்வர் என்ற முறையில் பிளஸ் 1 தேர்வு எழுதி 303 மார்க் பெற்றேன் .இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினேன். இதில் 346 மார்க்குகள் பெற்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.எனக்கு சட்டம் அல்லது யோகா பட்ட படிப்பு படிக்க ஆசை. எப்படியும்,கடினமாக உழைத்து.பட்டப்படிப்பு முடித்தே தீருவேன். நான் உயர் கல்வி படிக்க அரசு உதவி புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0