பெண்ணுக்கு வலை.கோவை மதுக்கரை, அவுசிங் யூனிட், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 72) இவர் நேற்றுசெல்வபுரம், எல்.ஐ.சி. காலனியில் இருந்து அரசு பஸ்சில் பேரூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது இருக்கையின் அருகே இருந்த மற்றொரு பெண் மூதாட்டி அணிந்திருந்த செயின் பழுதடைந்துள்ளது. கீழே விழுந்து விடும் அதனால் அதை கழட்டிஅவர் வைத்திருந்த பையில்.போடுவது போல நடித்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்க்கும்போது பையில் இருந்த 2 பவுன் செயின் பணம் ரூ2500 ஆகியவற்றை காணவில்லை. அருகில் பயணம் செய்த பெண்ணும் தலைமறைவாகி விட்டார். இது குறித்து சரஸ்வதி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0