காதலை கண்டித் ததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஜூன் 26 கோவை குனியமுத்தூர் சண்முக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் சுபா (வயது 17) இவர் பிளஸ் 2படித்து முடித்துவிட்டு ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இவர் ஒரு வாலிபரை காதலித்துவந்தாராம்.இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுபாவை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த சுபா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சிவராஜ் குனியமுத்தூர் போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.