கோவை மாநகரில் ரூ. 15 கோடியில் முழுமையான கண்காணிப்பு திட்டம்

போலீஸ் கமிஷனர் சர்வண சுந்தர் தகவல் .கோவை ஜூலை 24 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:- கோவை மாநகரில் முழுமையாக கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு இதற்கான திட்ட வரைவு தயாரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளது. இதன்படி திட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பஸ் – ரயில் நிலையங்கள், முக்கிய பகுதிகளில், இரவிலும் பதிவு செய்யக்கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகள், குற்றம் அதிகமாக நடைபெறும் பகுதிகளிலும், கேமராக்கள் பொருத்தப்படும் தற்போது மாநகரில் பொருத்தப்பட்டுள்ள 300 கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது .இது தவிர அந்தந்த போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பள்ளி – கல்லூரிகள் முன் கேமராக்கள் பொருத்த நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .இந்த கேமராக்களும் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைப்பு ஏற்படுத்தி கண்காணிக்கப்படும். கண்ணாடி இழை கேபிள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பு திட்டம் மாநகரில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் குற்றங்களை தடுக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் இந்த கண்காணிப்பு திட்டம் உதவும் .கோவை மாநகரில் பொது மக்களின் பாதுகாப்புக்கும், விபத்து தடுப்புக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்