டிரான்ஸ்போர்ட் அதிபர் வீட்டில் 15 பவுன் நகை திருடிய டிரைவர் கைது

கோவை ஆகஸ்ட் 2 கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள லெனின் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரகாஷ் ( வயது 44) இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவரது வீட்டில் பீரோவில் உள்ள லாக்கரை திறந்து பார்த்தபோது லாக்கரில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதுகுறித்து ஸ்ரீராம் பிரகாஷ் சிறுமுகை போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்த சிறுமுகை, பாரதி நகரை சேர்ந்த சர்மா ( வயது 25 )என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார் . போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் சர்மா தான் அந்த நகையை திருடியது தெரிய வந்தது. இதே தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.நகை மீட்கப்பட்டது.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.