சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய டிரைவருக்கு 2 ஆண்டுசிறை தண்டனை

கோவை ஜூலை 19 தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூரை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி (வயது 37 )இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சோமனூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சாலை விபத்தில் சேதம் அடைந்த ஒரு காரை சரி செய்து தருவதாக சங்கரமூர்த்தி கூறினார் .பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கினார். அந்தப் பெண்ணுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முகநூல் பக்கத்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பதிவு செய்து அவதூறான தகவலை பரப்பி உள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரமூர்த்தியை கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை 4- வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அருண்குமார் குற்றம் சாட்டப்பட்ட சங்கரமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 5 ஆயிரம அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..