கோவை ஜூலை 18 கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம்கேட்டாராம். முதல் கட்டமாக ரூ.3 லட்சம், பின்னர் ரூ.2 லட்சம் என லஞ்சம் கேட்ட இந்திரா, இறுதியில் ரூ.1.5 லட்சம் பெற சம்மதித்தார். லஞ்ச பணத்தை நேரடியாகக் கையில் கொடுக்காமல் பையில் வைக்குமாறு, சுரேஷ்குமாரிடம் அவர் கூறியதாக தெரியவந்துள்ளது..
இந்நிலையில், முன்கூட்டியே தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைவில் கண்காணித்து வந்தனர். அந்த நேரத்தில் காந்திபுரம், பாரதியார்ரோட்டில்,உள்ள ஒரு கடை முன் பணம் பரிமாற்றம் நடக்கும் போது, உதவி கமிஷனர்இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர் ரூ.1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் கைதுசெய்யப்பட்டார். .இதை யொட்டி அவரது வீட்டிலும் அலுவலகத்திலும்சோதனை நடத்தப்பட்டது. அதிகாரி இந்திரா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0