கோவை ஆகஸ்ட் 4 கோவை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க “ஸ்மார்ட் காக்கி ” என்ற பெயரில் 24 மணி நேரம் ரோந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலிருந்தும் மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்ல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள் .இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கோவில்பாளையம் பகுதிக்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதை பார்வையிட்டுஆய்வு செய்தார் .அப்போது அவர் நீண்ட நேரம் ஒரே பகுதி நிற்க கூடாது. குற்ற சம்பவம் குறித்த தகவல் வந்தால் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் .அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசருக்கு அறிவுரை வழங்கினார் மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதே போல கே .ஜி .சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில்புதிதாக அமைக்கப்பட்ட புறக் காவல் ( அவுட் போஸ்ட்) நிலையத்தை துவங்கி வைத்தார்.. நெடுஞ்சாலை யைஒட்டி நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காகவும், குறிப்பாக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் பொருட்டும். சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கும் புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-இந்த சாலையில் புதிதாக ரோந்து வாகனம் இயக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் நேரடி சப் இன்ஸ்பெக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்கள் வாளையார் மற்றும் எட்டிமடை சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் சோதனை செய்தும் ரோந்து பணியில் இருக்க பணி அமர்த்தப்பட்டுள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், மதுக்கரை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0