நடுரோட்டில் திடீரென பற்றிய புதிய கார்.!!

கோவை மதுக்கரை அருகே உள்ளகே .ஜி . சாவடியை சேர்ந்தவர் வேலுசாமி .இவரது மகன் ஆகாஷ். கோவை புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் விமல்ராஜ் ( வயது 22) இவர்கள் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 7:30 மணி அளவில் எட்டி மடை தனியார் கல்லூரி முன்புறம் வாடிக்கையாளர் ஓட்டி பார்ப்பதற்காக புதிய காரைஎடுத்து வந்தனர். அப்போது வழியில் தனது நண்பரான எட்டிமடையைச் சேர்ந்த கனகராஜ் மகன் முரளி என்பவரையும் ஏற்றிக்கொண்டனர். ஆகாஷ் காரை ஓட்டினார் .முன்புறம் விமல் ராஜ் பின்புறம் முரளி அமர்ந்திருந்தனர். அந்த கார் திருமலையாம் பாளையம் -பிச்சனூர் ரோட்டில் வேகமாக சென்றது. .இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் நீட்டி கொண்டிருந்த இரும்பு கேஸ் குழாய் மீது வேகமாக மோதியது. இதில் அந்த இரும்பு குழாய் காரின் முன் பகுதி கண்ணாடியை துளைத்துக்கொண்டு பின்புற சீட் வரை உள்ளே புகுந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அலறி துடித்துக் கூச்சலிட்டனர் .இந்த நிலையில் கார் திடீரென்று தீப் பிடித்து எரிய தொடங்கியது. உடனே காரை ஓட்டி வந்த ஆகாஷ் பின்சிட்டில் இருந்து இருந்த முரளி ஆகியோர் வெளியே குதித்தனர் .இரும்புக் குழாய் குத்தியதால் விமல் ராஜ் வெளியே வர முடியவில்லை. இதற்கு இடையில் காரில் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது .இதில் விமல் ராஜ் தீயில் கருகிஅதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் .இதை அறிந்த அக்கம்பக்கத்தில்உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் கே.ஜி. சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீயை அணைத்தனர் .இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேஸ் குழாய் மீது மோதி கார் தீ பிடித்து எரிந்ததில் வாலிபர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.