நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் மொபட் மீது லாரி மோதி ஒருவர் சாவு

.கோவை ஜூலை 8கோவை நஞ்சுண்டாபுரம் ,காமராஜர் புரம் ,பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 57 )இவர் நேற்று நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பாலத்தின் மைய பகுதியில் வேகவந்த ஒரு டிப்பர் லாரி இவரதுமொபட் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த நடராஜன் அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .இது தொடர்பாக நஞ்சுண்டாபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் காளிமுத்து ( வயது 42) கைது செய்யப்பட்டார் .இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.