அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களை நேரடியாக சந்தித்து பயன் பெற வழிவகை திட்டம்..!

உதகை- ஜன: 9

அமைப்பு சாரா தொழில் பிரிவு மக்களிள் மத்திய மாநில, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றவர்களை நேரடியாக சந்தித்து நமது பாரத பிரதமரின் முத்தான மக்கள் நலத் திட்டத்தில் மேலும் பலரை பயன்பெற வழிவகை செய்யும் நோக்கத்தோடு நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழில்பிரிவு நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பயனாளிகளை சந்திக்க இன்று முதல் இதே நாளில் அன்று என்ற மக்கள் தொடர்பு கொள்ள நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் A தர்மன் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான மோகன்ராஜ் அவர்களின் மேலான ஆதரவோடும், ஆலோசனையோடும் இன்று முதல் இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நீலகிரி* மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அமைப்புசாரா தொழில் பிரிவு மாவட்ட, மண்டல நிர்வாகிகள் சார்பாக இனிதே துவங்கப்பட உள்ளது. இதில் பாஜகவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற உள்ளது எனவே, எங்களின் இந்த முயற்சி வெற்றி பெற நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில, மாவட்ட மண்டல கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மற்றும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் பாஜக சார்பில் வரவேற்கிறோம்..