மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவர் பரிதாப சாவு

கோவை ஜூலை 21 கோவை மதுக்கரை, அறிவொளி நகரை சேர்ந்தவர் மதன்குமார்.இவரது மகன் நந்தகுமார் ( வயது 16 )பிளஸ் 1படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது நந்தகுமாரின் பெற்றோர் கடைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர். அவர்களுடன் நந்தகுமாரின் தங்கையும் உடன் செல்ல புறப்பட்டு உள்ளார் .அப்போது குளிராக இருந்ததால் தங்கையின் ஸ்வெட்டரை எடுத்து கொடுக்கும் படி நந்தகுமாரிடம் பெற்றோர் கூறியுள்ளனர். உடனே நந்தகுமார் வீட்டிற்குள் சென்று தங்கையின் ஸ்வெட்டரை எடுத்து வந்து வெளியில் நின்றிருந்த பெற்றோர்வசம் வீசி உள்ளார். அந்த ஸ்வெட்டர் தவறுதலாக அந்த வழியாகச் சென்ற மின் கம்பியில் மீது விழுந்துள்ளது .அதன் பிறகு ஸ்வெட்டர் அங்கேயே கிடந்துள்ளது. அதை எடுக்க முடியாததால் பெற்றோர் கடைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மின்கம்பி மீது விழுந்த ஸ்வெட்டரை வீடு துடைக்கும் துடைப்பான் ( மாப்பு) மூலம் நந்தகுமார் எடுக்க முயற்சி செய்தார். அந்த துடைப்பான்ஈரமாக இருந்ததால் மின்சாரம் தாக்கியது. இதில் நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘