கோவை மே 6 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் சங்கீர்த்தன் ( வயது 18 )இவர் தனது பள்ளி படிப்பு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து முடித்துள்ளார். டாக்டராக வேண்டுமென்ற கனவோடு கடந்த 20 24 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் 230 மதிப்பெண்கள் மட்டும் பெற்றதால் தேர்ச்சி பெற முடியவில்லை .இதை யடுத்து மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வை திருமுருகன் பூண்டியில் உள்ள மையத்தில் எழுதி விட்டு வீடு திரும்பினார். பின்னர் வினா தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும்? என கணக்கிட்டு உள்ளார். ஆனால் அவர் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான மதிப்பெண் கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது இதனால் டாக்டர் ஆவேன் என பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதோ ? என மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு திடீரென்று மாயமாகிவிட்டார். அந்த கடிதத்தில் நான் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை. டாக்ட ஆவேன் என உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். டாக்டர் படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன் எனக் கூறியுள்ளார். அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து பெற்றோர் பல்லடம் காவல்நிலத்தில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0