கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் புதிய வாக்காளர்களை இல்லந்தோறும் சென்று நேரடியாக சந்தித்து டிஜிட்டல் பதிவின் மூலம் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் எவ்வாறு இணைப்பது மற்றும் அதற்கான சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் மாநில வழக்கறிஞர்பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் பாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த பயிற்சி ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர்களிடம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து தேவைப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்து விரைவில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் பெருவாரியான வாக்காளர்களை இணைத்து எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக அரசு அமைய அதற்கான முழு முயற்சியுடன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது இப்பயிற்சி ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், பாகமுகவர்கள்,தகவல் தொழிற்நுட்ப நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0