கோவை கோவை ஜூலை 29 கோவை வடவள்ளி அருகே உள்ள ஓணாப்பாளையம். கிரீன் ஹோம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி கவிதா .இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த மகள் பள்ளிக்கு சென்ற நிலையில் இளைய மகள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். நேற்று மாலை 3:30 மணி அளவில் கவிதா தனது மூத்த மகளை அழைத்து வருவதற்காகாக ஸ்கூட்டரில் இளைய மகளுடன் பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது .இதில் அந்த பகுதியில் ஒரு விநாயகர் கோவில் முன் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து கவிதாவின் ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் கவிதா அவரது மகள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள்மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சாலையில் மரம் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1மணி நேரத்துக்கு பிறகு அந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0