பொதுமக்கள் கடும் பீதி.கோவை ஜூலை 25கோவை அருகே மருதமலையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில்,மான்கள் காட்டு யானைகள், காட்டுப்பன்றி சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக தடாகம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது .இந்த நிலையில் நேற்று போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம்அருகே உள்ள விராலியூர், இந்திரா காலனி சேர்ந்த ஜெயபாலன் மனைவி ரத்னா (வயது 51) வனப்பகுதிக்கு சென்றபோது மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரை தாக்கியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார் .அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..இந்த நிலையில் வடவள்ளி கல்வீராம்பாளையத்தை அடுத்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை ரோட்டில்பட்டப்பகலில் காட்டு யானை நேற்று சாலையை கடந்து சென்றது ..இதனை பார்த்த பொது மக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருசக்கர வாகனங்களையும், பஸ்களையும், கார்களையும் நிறுத்தினர்.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறை விரைந்து வந்து காட்டு யானையை வர பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0