கடன் தொல்லையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஆகஸ்ட் 6 கோவை,ரத்தினபுரி, ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி தேவி (வயது 38) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம்.இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.