கோவைஆகஸ்ட் 13 கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவிதனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 8-ம் தேதி வெங்கடேஷ் ஒர்க் ஷாப் சென்று விட்டார் அவரது பாட்டி சரஸ்வதி ( வயது 96) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்..இந்த நிலையில் வெங்கடேசும் அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி முகத்தில் ரத்த காயத்துடன் இருந்தார். வீட்டில்பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரே மர்ம ஆசாமிகள் மூதாட்டியை தாக்கி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளைய டித்து சென்று விட்டனர். இது குறித்து வெங்கடேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தார்.அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு பெண் வெங்கடேஷ் வீட்டுக்குள் செல்வதும் சிறிது நேரம் கழித்து வெளியே திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது. உடனே அந்தப் பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்தப் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் மனைவி தீபா (வயது 37 )என்பதும் அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. எனவே அவர்தான் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி ந கையைகொள்ளை அடித்து சென்றதும் தெரிய வந்தது .இதை தொடர்ந்து ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீபாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 9 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0