கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை

தாய் -அக்காளிடம் மாஜிஸ்திரேட் தீவிர விசாரணை.கோவை ஆகஸ்ட் 9கோவை கடைவீதி காவல் நிலையத்தில் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் அறையில் பேரூர் ராமசெட்டிபாளையம் , காமராஜர் நகரை சேர்ந்த அறிவொளிராஜன் ( வயது 60) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அல்லவா? இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த போது பணியில் இருந்தது யார்? எங்கு கவனக்குறைவு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் போலீசாரின் கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அந்த போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீஸ்காரர் செந்தில் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டனர். தற்கொலை செய்த தொழிலாளி அறிவொளி ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்யவும் ,மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை யடுத்து கோவை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வெர்ஜினி வெஸ்டாவிசாரணையை தொடங்கினார்.சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த போலீசார் மற்றும் அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள சட்டம் – ஒழுங்கு,குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது தனி தனியாக சந்தித்து சம்பவம் நடந்த போது அங்கு பணியில் இருந்தவர்கள் யார்? அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்றுகேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார் .தொடர்ந்து அவர் அறிவொளி ராஜனின் அக்காள் வீரமணி (வயது 65) தாயார் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். தற்கொலை செய்து கொண்ட அறிவொளி ராஜனின் நடவடிக்கை எப்படி? அவர் வீட்டில் எப்படி இருப்பார்? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் கடந்த சில.நாட்களாக தன்னை யாரோ சிலர் கொலை செய்ய துரத்துவதாக கூறிக்கொண்டு இருந்தார். நாங்கள் தான் அவருக்கு ஆறுதல் கூறி வந்தோம். ஆனால் தற்கொலை செய்து கொள்வார் என்று நினைக்கவில்லை என்று கூறினார். சாவில் சந்தேகம் ஏதாவது உள்ளதா? என்று கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்று பதில் அளித்தனர் .. இதையடுத்து அக்காளும்,தாயாரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.