கோவை ஆகஸ்ட் 6 கோவை, பி- 1 கடைவீதி காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 11 – 19 மணி அளவில் ஒருவர் பதற்றத்துடன் ஓடி வந்தார்.தன்னை சிலர் கொலை செய்ய துரத்தி வருவதாக கூறி காவல் நிலையத்தில் தஞ்சம்புகுந்தார்.அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீஸ்காரர் செந்தில் அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையின் போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பவர் தெரிந்தது.இதையடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டார்…இந்த நிலையில் இன்று காலையில்காவல் நிலைய முதல் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அறையில்மின்விசிறியில் வேட்டியை கட்டி அந்த நபர் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் ஆய்வு செய்யப்பட்டது.விசாரணையில் தூக்கில் தொங்கியவர்பேரூர் பக்கம் உள்ள ராம செட்டிபாளையத்தைச் சேர்ந்தராஜன் என்ற அறி வொளி ராஜன் (வயது 60) என்பது தெரிய வந்தது.அவர் வீட்டில் தனது சகோதரி மட்டும் தாயாருடன் வசித்து வந்தார்.திருமணம் ஆகாதவர்.சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார்.இவர் மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 2நாட்களுக்கு முன் தன்னை யாரோ கொல்ல வருவதாக தனது சகோதரியிடம் கூறினாராம். இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ?என்பது குறித்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0