தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ள முன் மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற நான்கு மாத செயல் திட்டத்தின் மூலம் இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்தி கல்வி ரீதியாக சமூக ரீதியாக அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கருத்தரங்கு
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஃபெடரேஷன் ஹாலில்
நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என
நூற்றுக்கணக்கானோர் கருத்தரங்கில் பங்கு பெற்றனர்,
சிறப்பு விருந்தினர்களாக
மாநிலத் துணைத் தலைவர் தாவூத் கைஸர் மாநிலச் செயலாளர் முகம்மது அம்ஜத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்,
நீலகிரி
மாவட்டத் தலைவர் ஷபீயுத்தீன் செயலாளர் உமர் பொருளாளர் ஹக்கீம் துணைத் தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் சிராஜுதீன் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் துவங்கியது,
நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
இன்றைய இஸ்லாமிய இளைஞர்களை போதை சினிமா போன்ற கலாச்சார சீரழிவுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இன்றைய இளைஞர்களை உருவாக்க வேண்டும்
ஜாதி மத பேதமின்றி மக்கள் நல பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். என்று வலியுறுத்தப்பட்டது
தீவிரமான சிறப்பு திருத்தம் (SIR) என்ற பெயரில் பிஹாரில் ஒரே மாதத்தில் 51 இலட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இவர்களெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட வாக்களித்தவர்கள்,
NRCன் வேறு வடிவமாக வந்துள்ள SIR முறை, ஜனநாயகத்தை படுகுழிக்கு இழித்து செல்லும் செயல்! இந்த செயல்திட்டம் உடனே நீக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் முன் வைத்துள்ளோம்,
மற்றும்
ஜெகதீப் தன்கர் ராஜினாமா
இந்திய துணைக்குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரீன் ராஜினாமா பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது, ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு எதிராக தனது அதிகாரத்திற்குட்பட்டு அவர் எடுத்த முடிவுகள் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது, அரசனை மிஞ்சிய ராஜ விஸ்வாசத்தோடு இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவர் இம்முடிவை நோக்கி ஓரு சில மணி நேரங்களில் தள்ளப்பட்டுள்ளார், நாட்டின் எல்லா பதவிகளையும் பலம் அற்றதாக மாற்றும் ஒன்றிய அரசை வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம் என்று பத்திரிகையாளர்கள் செய்தியில் தெரிவித்தனர்,
சர்வதேசப் போர்க்குற்றவாளி நெதன்யாகு ஆளும் போக்கிரி இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலோடு இணைத்து கொள்வதாக தனது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, இந்த மோசமான நடவடிக்கையை இந்தோனேசியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்துள்ள நிலையில், மிகப்பெரும் ஜனநாயக நாடுகலில் ஒன்றான இந்தியா இச்செயலை வன்மையாக கண்டிக்க.வேண்டும் என்னும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0