மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 61/2கிலோ கஞ்சாவுடன் கேரளா வாலிபர் கைது

கோவை ஆகஸ்ட் 4 பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேக படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 6 கிலோ 500கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாகஅவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முனீர் (வயது 24) என்பது தெரிய வந்தது..இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.