வாகன சோதனையில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கோவை ஜூலை 29 கோவை மாநகரம், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி இவர் நேற்று புலியகுளம் மெயின் ரோடு பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ் காரர் ஒருவருடன் சேர்ந்து வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சுங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை மிரட்டியதாக பாப்பநாயக்கன்பாளையம், அம்மன் குளம் ரோட்டை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா (வயது 26) என்பவரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.