செல்போனில் பேசி பாலியல் தொல்லை கொடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்..பி. யிடம் இளம்பெண் புகார்

.கோவை ஆகஸ்ட் 8 கோவை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண் இவர்நேற்று கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார் .பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான் கோவையில் உள்ள தனியார் மையத்தில் கணினி தொடர்பாக படித்துக் கொண்டு அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறேன் .கடந்த ஜூன் மாதத்தில் எனது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டார். அதில் வக்கீல் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தொடர்ந்து என் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டவர் தவறாக பேசினார். இதுபோன்று என்னிடம் பேச வேண்டாம் என்று இணைப்பை துண்டித்து விட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து எனக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார் நீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன் மீது விபசார வழக்கு போட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி வருகிறார் .எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த இளம் பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார்..