ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவனை தாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

கோவை ஜூலை 15 திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன் .அன்னூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார் .அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து சொக்கம்பாளையம் வந்தார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவரிடம் சிறுவன் “லிப்ட் ” கேட்டுள்ளார் உடனே அவரை மோட்டார் சைக்கிள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட வாலிபர் சோமனூரில் வந்து மது பாட்டில்கள் வாங்கினார் .அவர் அந்த சிறுவனை சூலூர் அருகே காடம்பாடி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உள்ளார் .அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் அந்த மாணவனை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அந்த மாணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைநடத்தி வந்தனர். விசாரணையில் சிறுவனை ஓரினச்சேர்க்கை கட்டாயப்படுத்தி தாக்கிய வாலிபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது .அவரை காரணம்பேட்டை நால்ரோடு சந்திப்பில் போலீசார்மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள ஆராகுளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் வசந்தகுமார் ( வயது 23 ) தெரியவந்தது இவர் கறிக்கடையில் வேலை செய்துவந்தார் மது போதையில் மாணவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றதும் அவர் மறுத்ததால் தாக்கியதும் தெரிய வந்தது.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்..இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.