கோடை வெயில் தாக்கத்தை தணிக்க ஏ.சி.ஹெல்மெட்

கோவை மே 14 கோடை வெயில் தாக்கத்தை தணிக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் 36 பேருக்கு ஏ.சி. ஹெல்மெட்டுகள் நேற்று வழங்கப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த ஹெல்மெட்டுகளை ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தார் தனது சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து வழங்கி உள்ளனர்.ஒரு ஹெல்மெட்டின்விலை ரூ.15 ஆயிரம் ஆகும்.இந்த ஹெல்மெட் தலையில் அணிந்தால் 2 மணி நேரத்திற்கு வெளியில் நிலவும் சீதோஷ்ண நிலையை விட 5 டிகிரி குறைவாக கொடுக்கும்.இது 850 கிராம் எடை கொண்டது. 2 மணி நேரம் சார்ஜ் நிற்கும்.பிறகு சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.