கோவை ரெயில் மீது கல்வீச்சு.கண்ணாடி உடைந்தது

கோவை ஜூலை 16 கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தது. பின்னர் அந்த ரெயில் புனேவை நோக்கி புறப்பட்டு வடகோவை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ரெயிலில் உள்ள ஏ.சி. பெட்டி கண்ணாடியில் ஒரு கல் வீசப்பட்டது. இதனால் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கல் வேகமாக வந்து விழுந்ததால் அந்த பெட்டியில் கண்ணாடி உடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இது குறித்து தகவல் அறிந்த கோவை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில் ரெயில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நேற்று காலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். ரெயில் மீது கல் வீசிய வர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள். ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்