கல்லூரி வளாகத்தில் மயங்கி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு.

கோவை செப்டம்பர26 மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சுப்பாடாநாஸ்கர் ( வயது 53) இவர் கோவை பீளமேட்டில் உள்ள உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில்குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார் .நேற்று முன் தினம் கல்லூரி வளாகத்தில்வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி கேசரி சர்தார் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.