கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை – ரூ 5 ஆயிரம் அபராதம்

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ளமுத்து கவுண்டன் புதுரை சேர்ந்தவர்முருகேசன். சலவைதொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டுஉள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சூலூர் பகுதியைசேர்ந்த முத்து செல்வம் மகன் அரவிந்த் என்றஅரவிந்த் குமார் மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி அரவிந்த என்றஅரவிந்த் குமாருக்குநீதிபதி சசிரேகா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற ஏட்டு பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன்  பாராட்டினார்.