கண் திறந்த சாமி சிலை!பக்தர்கள் பரவசம்!

கோவை டவுன்ஹால், NH சாலையில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆலயம் கோவை மக்கள் இடையே மிகவும் பிரபலமான ஆலயமாக திகழ்கிறது. காலை வழக்கம் போல் ஆலயத்தின் பூசாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் பக்தர் அம்மன் சிலையின்   வலதுபுறம் உள்ள கண் திறந்து இருப்பதை பார்த்து பூசாரியிடம் தெரிவித்து உள்ளார்.இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதை அடுத்து, ஏராளமான  பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிக அளவில் பெண் பக்தர்கள் குவிந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிலை கண் திறந்ததாக கோவையில் பரவிய செய்தியால், இந்த ஆலயத்திற்கு காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.