வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 9பவுன் நகை கொள்ளை

கோவைஆகஸ்ட் 9 கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவிதனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று வெங்கடேஷ் ஒர்க் ஷாப் சென்று விட்டார் அவரது பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்..இந்த நிலையில் வெங்கடேசும் அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாயார் முகத்தில் ரத்த காயத்துடன் இருந்தார். வீட்டில்பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரே மர்ம ஆசாமிகள் மூதாட்டியை தாக்கி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளைய டித்து சென்று விட்டனர். இது குறித்து வெங்கடேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.