எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து 4 வாகனங்கள் எரிந்து நாசம்

கோவை ஆகஸ்ட் 1கோவை பேரூர் அருகே உள்ள ராம செட்டிபாளையம், கூட்டுறவு நகரை சேர்ந்தவர் சுர்ஜித் ( வயது 39) இவர் தேனி மாவட்டம் குமுழியில் உள்ள ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர்களுடன் சுர்ஜித் தாயாரும்கூட்டுறவு நகரில் வசித்து வருகிறார்..சுர்ஜித் வாரம் ஒருமுறைதான் கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வருவார்.இந்த நிலையில் சுர்ஜித் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர் .அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வெளியில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே சுர்ஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்த போது வீட்டில் நிறுத்தி இருந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்து சுர்ஜித் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்த தீ வேகமாக பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பரவியது அவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது. குறித்துகோவை புதூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் விரைந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது..போலீஸ் விசாரணையில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் முதலில் தீ பிடித்ததும், அதிலிருந்து மற்ற வாகனங்களுக்கு தீ பரவியதும் தெரிய வந்தது .எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.