இவரது மகன் ஜெயராமன் ( வயது 26). இவர் 3 வயதாக இருக்கும்போது இவரது தாய் – தந்தை 2 பேரும் உடல்நல குறைவால் இறந்துவிட்டனர். சிறுவனாக இருந்த ஜெயராமனை அவரது சித்தப்பா நாகராஜன் தனது அரவணைப்பில் வளர்த்து படிக்க வைத்தார். அதன்படி ஜெயராமன் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். ஜெயராமனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது சித்தப்பா நாகராஜ் வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஜெயராமன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார் .கோவை பொள்ளாச்சி 4 வழி சாலையில் கிணத்துக்கடவு பகுதி சிங்கராயம்பாளையம் பிரிவு அருகில் லாரி ஒன்று “யூடேர்ன் ” பகுதியில் திரும்ப முயன்றது .இந்த சந்தர்ப்பத்தில் லாரியும் ஜெயராமன் வந்த மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிள் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. ஜெயராமன் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தை உயிருக்கு போராடினார். இதற்கிடையில் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து உராய்வு ஏற்பட்டதில் பைக் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பைக் முழுவதும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்தனர் .பின்னர் படுகாயம் அடைந்த ஜெயராமனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயராமன் இறந்தார். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், சப்- இன்ஸ்பெக்டர் காளி சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0