பெண் தொழில் அதிபரின் இ-மெயிலுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பணம் பறிக்க முயன்ற ஐ.டி. இன்ஜினியர் கைது

கோவை ஆகஸ்ட் 4 கோவையைசேர்ந்தவர் 40 வயது பெண். இவர் சொந்தமாக ஐ.டி .நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அருண்குமார் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதல்இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையேபழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்தப் பெண் தொழில் அதிபர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து 2குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் .இதையறிந்த அருண்குமார் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகத் தொடங்கினார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பெண் தொழிலதிபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அவர் அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து வந்துள்ளார் .மேலும் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து 20 23ஆம் ஆண்டு அந்தப் பெண் அளித்த புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து அவர் அந்த பெண் தொழிலதிபரின் இ-மெயில் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பணம் பறிக்க முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அந்த பெண் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.